இந்த படம் பார்த்துக் கொண்டிருந்த போது ஒருவிதமாகவும் பார்த்து முடித்தவுடன் வேறுவிதமாகவும் தோன்றியது....
மொக்கையா, காமெடியா சீரியஸா எனப் புரிந்து கொள்ள இயலாத ரகம்.,. ஆனால் நேரம் போனதே தெரியவில்லை....
திரைக்கதை இல்லாமல் கூட ஒரு படம் எடுக்க முடியும் என நிரூபித்துள்ளது...
காமெடியானாலும் கலைப்படைப்பு/art direction அசத்தல் (பாகுபலிக்கு நிகராக...!!)மாடர்ன் கேட்ஜடஸ் இல்லாத ஒரு நவீன யுக ஆங்கிலம் பேசும் ஆந்திர கிராமம்....
யோசித்துப் பார்த்தால் நிறைய பேரை நிறைய படங்களை பகடி செய்திருக்கிறார்கள்...(but very surtle and suggestive).... குடும்பத்தோடு சென்று சிரித்து மகிழலாம்...
கௌதம் கார்த்திக் பாத்திரம் அந்த made up heroவை ஞாபகப்படுத்தியது எனக்கு மட்டுமா...? அதிலும் அந்த உருப்படியான நண்பன் (சந்தானம் ?) நடிப்பு அருமை...
Classic பட வரிசையில் வரும் சின்னதம்பி படத்தில் கூட நிறைய சென்டிமென்ட் அபத்தங்கள் வரும். ஆனால் இந்த படத்தில் பகடி செய்யப்படும் அத்தனை சென்டிமென்ட் அபத்தங்களும் உண்மையான உருப்படியான logical முடிவுகளும் படத்தை எங்கோ கொண்டு நிறுத்தியுள்ளன...
வழக்கம் போல விஜய் சேதுபதி எல்லா கெட்டப்பிலும் கலக்கல்..
No comments:
Post a Comment