#acutouchtherapy
எப்பொழுதும் சிலரது பேச்சு நமது ஆன்மாவை தொடுவதாக இருக்கும். அதை கருத்தூன்றி கவனிக்கும் பேறையும் இறை நமக்கு வழங்கியிருக்கும். அப்படியொரு வாய்ப்பை இறைவன் எனக்கும் வழங்கினான்.
2013 செப்டம்பர் மாதம் செம்மை அமைப்பின் குடும்ப நலக்கூடலில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அன்று வசீர் சுல்தான் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். கல்லூரி மாணவர் தோற்றத்தில் இருந்தவர் பேச ஆரம்பித்தவுடன் அனைவரது மனதையும் கவர்ந்தார்.
நமக்கு வருவது எதுவுமே நோயல்ல.. கழிவுகளின் தேக்கம் மற்றும் வெளியேற்றமே நோயெனப் புரிந்து கொள்ளப் படுவதை மிக அழகாக விளக்கினார். ஒவ்வொருவரையும் அறியப்பட்ட ஒரு நோயின் பெயரைக் கூறி அது எந்த உறுப்பின் கழிவு என சுலபமாக புரியவைத்தார்.
தான் கற்றுக்கொண்ட புதிதில் சிகிச்சை செய்த சர்க்கரை நோயாளி ஒருவரை காணொளி படம்பிடித்ததையும், அவரது முதுகில் வந்த குழிப்புண் எவ்வாறு இறையருளால் அழகாக மூடி நலமானது, குழியான போதும் பொறுமையாக (இப்பொழுதும் மருந்துகள் தேவையில்லையா என சிரித்துக் கொண்டே கேட்டு.....) அவரை இன்முகத்துடன் கவனித்துக் கொண்ட கணவர் (அதற்கும் இறையருள் துணை புரிய வேண்டும்), பின்னர் அந்த காணொளி பற்றி அறிந்த மருத்துவ அரசியல் விடுத்த மிரட்டல் என அனைத்தும் பகிர்ந்தார்.
பிறகு நண்பர்கள் கூறியபடி (நம்மை நம்பி வருபவர்களை நலமடையச் செய்தால் போதுமானது, முழு உலகுக்கும் புரியவைப்பதோ மாற்றுவதோ நமது வேலை இல்லை, இறைவன் அதை விரும்பவும் மாட்டான்) அந்த காணொளியைத் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாகவும் கூறினார்....
அவர் கூறிய அனைத்து விஷயங்களும் எப்பொழுதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
எனக்கு சமீபத்தில் வந்த உடல்நலக்குறைவின்போது மருத்துவர் கனகசபாபதி அவர்களின் இறைவழி மருத்துவத்தால் உடலில் மட்டுமல்ல மனநலம் கெட்டாலும் உடலில் பல சிரமங்கள் வரும் என்ற புரிதல் கிடைத்தது... சிறு சிறு உபாதைகள் தொடர்ந்து வரும் போதும் அவர் பொறுமையாக இறைவனிடம் மன்னிப்பும் ஒவ்வொரு சிறு மாற்றத்திற்கு நன்றியோடு பிரார்த்தனையும் வைத்து பொருளை நம்பாமல் இறையருளை மட்டுமே நம்பி பயணிக்க வைக்கும் போதும் மனம் மேலும் உறுதி பெற வசீர் சுல்தான் கூறிய அந்த சர்க்கரை நோயாளியின் கதை நினைவில் வந்து போகும். அவ்வளவு பெரிய குழிப்புண்ணே இறையருளால் சுகமாகும் போது நமது உபாதைகளும் இறையருளால் சரியாகும் என்று நம்பிக்கை வந்தது...
வசீர் சுல்தான் அவர்கள் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததையும் அவ்வளவு லேசாக அருமையாக விவரித்தார். நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்... அதுவாகவே நடந்தது எனக்கூறினார். சமீபத்தில் செந்தமிழன் அவர்கள் தனது மனைவி காந்திமதிக்கு பார்த்த (!) மூன்றாம் பிரசவமும் நினைவுக்கு வந்தது.... காந்திமதியே கூறக்கூற ஒவ்வொன்றாக செய்ததாகக் கூறினார்....
வெகு நாட்களாக வசீர் சுல்தான் அவர்களை சந்தித்து நன்றி கூற விரும்பியிருந்தேன். இன்றே அந்த வாய்ப்பு வாய்த்தது. இறைவனுக்கு நன்றி இத்துணை நல்லெண்ணத் தூதுவர்களை நம் வாழ்க்கையில் அனுப்பிக் கொடுத்தமைக்கு....
அவரது சிகிச்சை மையத்தில் எளிய பெண்கள் இருவர் அருகில் அமர்ந்திருந்தனர்.. தனது பிரச்சினைக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் அலோபதியில் மருந்து வாங்கி வருவதாகக் கூறியதாகவும் இன்னொரு பெண்ணின் மிகப்பெரிய தொந்தரவே ஒரு நொடியில் சரியானதை அறிந்து இங்கு வந்துள்ளதாகவும் பேசிக்கொண்டனர். இறைவன் மனதுவைத்தால் எந்த மனிதரையும் சரியான இடம் கொணர்ந்து சேர்ப்பார் எனப்புரிந்தது.
எனது எண் 25 ...எவ்வளவு நேரமாகும்... எனக் கேட்டுக் கொண்டேன்... 10 நிமிடங்கள் என்றார்... நம்ப முடியாமல் தான் உள்ளே சென்றேன். அனைவரும் ஒரு நிமிடம் இரு நிமிடம் மட்டுமே சிகிச்சை பெற்று மகிழ்ச்சியாகத் திரும்பிக் கொண்டிருந்தது வியப்பை அளித்தது.. மற்றவர்களைக் காக்க வைக்காமல் நானும் வேகமாக செல்ல வேண்டுமே என்ற பதட்டத்தில் ஒழுங்காக பேச முடியவில்லை.., நான் என்ன கூறினேன் அவருக்கு என்ன புரிந்தது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
பல வருடங்களாக ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை செய்திருந்தாலும் பிரசித்தி பெற்ற ராமையா நர்சிங் ஹோம் நடத்தி தற்போது இறைவழி மருத்துவம் மட்டுமே பார்க்கும் மருத்துவர் கனகசபாபதி அவர்கள் அன்பின் ஊற்று. 10 பேர் இருப்பது போலவே தோன்றாது (அதில் ஐந்து பேர் அலோபதி மருத்துவர்கள்) அந்த வீட்டில் ..... அவ்வளவு அமைதியும் சமாதானமும் நிலவும். ஒவ்வொரு முறை செல்லும் போதும் தனது கையாலேயே உணவும் தயாரித்து பரிமாறுவார். நான் அழைக்க மறந்தாலும் மறக்காமல் அழைத்து நலம் விசாரிப்பார். வேதம் கற்பிப்பார்.
உடல் மனம் இணைந்து வாழும் பொருட்டு (அதுவும் இந்த gst வந்தபிறகு உற்பத்திவரித்துறையில் வேலை செய்வோர் மனதைப் பிழிந்து எடுக்கும் பணி..... பலபேர் படும் அவதியைக்கண்டு...) இறையருளால் விருப்ப ஓய்வும் பெற்று வாழ்வு அமைதியும் சமாதானமும் நிறைந்து செல்கிறது.. நன்றி இறைவா..,..
No comments:
Post a Comment