Tuesday, June 12, 2012

2012 இன் நிலைமை....
நமது தாத்தா பாட்டி மற்றும் அதற்கு முந்தைய காலத்தவர் கடைப்பிடித்தவை மற்றும் பெற்றிருந்தவை...

  • நல்ல உடலுழைப்பு...மற்றும் உடலுழைப்பை மதிக்கும் மனம்
  • ஆண் பெண் என்ற வித்தியாசமின்றி அனைவரும் அவரவர் மனம் விரும்பிய வேலை செய்தனர் (எனது தாத்தா அருமையாக சமைப்பார், பாட்டிக்கு வெளி வேலை பிடிக்கும், எப்பொழுது மோட்டார்-இல் குளிக்க சென்றாலும் கண்டிப்பாக பெரியம்மா துணியையும் சேர்த்தே எடுத்து சென்று பெரியப்பா துவைப்பார்...)
  • இயற்கை விவசாயம் செய்தனர் - அதிலும் ஒருங்கிணைந்த விவசாய முறைகளும் (மாடு, ஆடு கோழிகளுடன்), மாற்று பயிர் முறைகளும் (மண்ணில் உள்ள சத்துக்களை புதுப்பிக்க) அறிந்து பல்லுயிர் ஓம்பினர்.  இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்ததால் பல நோய்களை தவிர்த்தனர்.
  • உடல் நலனை பொறுத்தவரை ஒவ்வொரு வீட்டு மகளிரும் பல மருத்துவ முறைகளும் அறிந்திருந்தனர் 
  • ஊருக்கு ஒரு வைத்தியர் இருந்தார் அவர் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்
  • இதை தவிர, " பார்வை பார்ப்பவர்களும்"  இருந்தனர் (வலி நீக்க....எங்கள் தாத்தா மண் வெட்டியால் வெட்டு பட்டவரின் வலியையும் உடனே நீக்கும் ஆற்றல் படைத்தவர்)....தற்போதைய முறையில் இதை இறை வழி மருத்துவம் அல்லது ஹீலிங் என கூறலாம்.
  • பரபரப்பில்லாத நிதானமான வாழ்க்கை முறை 
  • மிகுந்த பொறுமை கொண்டிருந்தனர்
  • உடல் நலனை பொறுத்தவரை பல விஷயங்கள் தானே சரியாகும் என காத்திருந்தனர் ..உடல் விதிகளை அறிந்து, பெரும்பாலும் உடல் கடிகாரத்தை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர்....
  • பணத்திற்கு அளவு கடந்த மரியாதை இல்லை.
  • சொத்து சேர்ப்பதிலும், பணத்தை முடக்குவதயுளும் பெரிய ஆர்வம் இல்லை
  • கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்ததால் விட்டுகொடுக்கும் மனப்பக்குவம் இருந்தது
  • பெரியாரை மதிக்கும் பண்பும் சிறியாரை அரவணைக்கும் போக்கும் இருந்தது...
  • விரதம் மற்றும் பட்டினியாலேயே பல நோய்களை தீர்த்துக்கொண்டனர்.


எனவே அவர்கள் வாழ்ந்த சராசரி  வயது.....80 முதல் 150  வரை (நோய் நொடியின்றி, இறக்கும் வரை தனது துணியை தானே தோய்த்து, அதிகாலை எழுந்து, மன அமைதியுடன்) 
நமது அம்மா அப்பா காலத்தில்
  • பசுமை புரட்சி என்னும் பெயரால் நஞ்சு கலந்த பயிர் பாகுபாடு ஆரம்பித்தது....அதன் பலனை முதல் தலைமுறையாக கண்டவர்களாதலால் இன்னும் பலரால் அந்த மயக்கத்தில் இருந்து வெளி வர இயலவில்லை..
  • பொறுமை குறைந்தது......எதுவும் உடனே நடை பெற வேண்டும் என்ற ஆவல்....
  • ஓரளவு உடல் உழைப்பை மதித்தாலும் சொகுசு வாழ்க்கையை நோக்கிய பயணம் அதிகம்
  • கூட்டு குடும்பங்கள் சிதைந்து தனி குடும்பங்கள் பெருகியதால் பணத்தேடல் பல கிளைகளிலும் பயணம் 
  • ஆணுக்கு இந்த வேலை (ஆண் தண்ணீர் குடிக்க கூட சமையல் அறை  வந்ததில்லை என்ற பெருமை), பெண்ணுக்கு இந்த வேலை என்ற அதீத வரையறை....
  • மகன் மகளை திட்டி அடித்து வளர்த்து, பேரன் பேத்தி எடுக்கும் காலத்திலேயே ஓரளவு பொறுமை கை வருகிறது...

விளைவு.....பலர் சர்க்கரை நோய் எனவும் இதய அழுத்தம் எனவும் மாத்திரைகளையே உணவாய் உண்டு நாட்களை கடத்திகொண்டிருக்கின்றனர்.....சராசரி வயது குறைந்து, 60 -70 -80 இல் நிற்கின்றது......90 ஐ தாண்டினால் மிகுந்த அதிசயமே....

இன்றைய தலை முறை (நாம்)

  • இரண்டு தலை முறைகளின் நிறை குறைகளை கண்டுள்ளதால், மீண்டும் இயற்கையை நோக்கிய வேட்கை....
  • உடல் உழைப்பை அவமானமாக நோக்கும் எண்ணம் ...சென்ற தலைமுறையில் அம்மா அப்பாவுடம் பகிர்ந்த வேலைகளை (வீடு பெருக்குதல், துணி தோய்த்தல்) செய்ய மனம் இல்லை....
  • மிகுந்த சொகுசு வாழ்க்கையை நோக்கிய பயணம் .....
  • பெருத்த உடல் நோய்கள், உடல் சார்ந்த தொல்லைகள் 
  • நேரமின்மையால் அடி வாங்கும் உறவுகள்
  • பயணத்திலேயே செலவழியும் பாதி நேரம்
  • பணத்தை தேடி ஓடும் வாழ்க்கை முறை
  • உடல் விதிகள், இயற்கை முறைகளை அறியாமல் மருத்துவரிடமும், மருத்துவமனைகளிடமும் மாட்டி முழிக்கும் அவல நிலை....
  • சிறிதாக இருக்கும்போதே சரி செய்யாமல் நோய் முற்றிய பிறகு படும் அவஸ்தைகள்...
  • நேரத்திற்கு எதையும் செய்யும் மனப்பாங்கு குறைந்துள்ளது...எதையும் எப்படியும் செய்யலாம் என்ற விட்டேத்தி தனம் .
  • அனுபவ அறிவை கைக்கொள்ளும் மனதின்றி பெரியவர்களை மதிக்கும் தன்மை குறைந்துள்ளது....

இவர்களின் சராசரி வயதும் வயதான பின்னர் வாழ்க்கை தரமும் என்னவாக இருக்கும்.....

நாம் மாற இறைவனை வேண்டுவோம்....