2012 இன் நிலைமை....
நமது தாத்தா பாட்டி மற்றும் அதற்கு முந்தைய காலத்தவர் கடைப்பிடித்தவை மற்றும் பெற்றிருந்தவை...
எனவே அவர்கள் வாழ்ந்த சராசரி வயது.....80 முதல் 150 வரை (நோய் நொடியின்றி, இறக்கும் வரை தனது துணியை தானே தோய்த்து, அதிகாலை எழுந்து, மன அமைதியுடன்)
நமது அம்மா அப்பா காலத்தில்
விளைவு.....பலர் சர்க்கரை நோய் எனவும் இதய அழுத்தம் எனவும் மாத்திரைகளையே உணவாய் உண்டு நாட்களை கடத்திகொண்டிருக்கின்றனர்.....சராசரி வயது குறைந்து, 60 -70 -80 இல் நிற்கின்றது......90 ஐ தாண்டினால் மிகுந்த அதிசயமே....
இன்றைய தலை முறை (நாம்)
இவர்களின் சராசரி வயதும் வயதான பின்னர் வாழ்க்கை தரமும் என்னவாக இருக்கும்.....
நாம் மாற இறைவனை வேண்டுவோம்....
நமது தாத்தா பாட்டி மற்றும் அதற்கு முந்தைய காலத்தவர் கடைப்பிடித்தவை மற்றும் பெற்றிருந்தவை...
- நல்ல உடலுழைப்பு...மற்றும் உடலுழைப்பை மதிக்கும் மனம்
- ஆண் பெண் என்ற வித்தியாசமின்றி அனைவரும் அவரவர் மனம் விரும்பிய வேலை செய்தனர் (எனது தாத்தா அருமையாக சமைப்பார், பாட்டிக்கு வெளி வேலை பிடிக்கும், எப்பொழுது மோட்டார்-இல் குளிக்க சென்றாலும் கண்டிப்பாக பெரியம்மா துணியையும் சேர்த்தே எடுத்து சென்று பெரியப்பா துவைப்பார்...)
- இயற்கை விவசாயம் செய்தனர் - அதிலும் ஒருங்கிணைந்த விவசாய முறைகளும் (மாடு, ஆடு கோழிகளுடன்), மாற்று பயிர் முறைகளும் (மண்ணில் உள்ள சத்துக்களை புதுப்பிக்க) அறிந்து பல்லுயிர் ஓம்பினர். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்ததால் பல நோய்களை தவிர்த்தனர்.
- உடல் நலனை பொறுத்தவரை ஒவ்வொரு வீட்டு மகளிரும் பல மருத்துவ முறைகளும் அறிந்திருந்தனர்
- ஊருக்கு ஒரு வைத்தியர் இருந்தார் அவர் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்
- இதை தவிர, " பார்வை பார்ப்பவர்களும்" இருந்தனர் (வலி நீக்க....எங்கள் தாத்தா மண் வெட்டியால் வெட்டு பட்டவரின் வலியையும் உடனே நீக்கும் ஆற்றல் படைத்தவர்)....தற்போதைய முறையில் இதை இறை வழி மருத்துவம் அல்லது ஹீலிங் என கூறலாம்.
- பரபரப்பில்லாத நிதானமான வாழ்க்கை முறை
- மிகுந்த பொறுமை கொண்டிருந்தனர்
- உடல் நலனை பொறுத்தவரை பல விஷயங்கள் தானே சரியாகும் என காத்திருந்தனர் ..உடல் விதிகளை அறிந்து, பெரும்பாலும் உடல் கடிகாரத்தை கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர்....
- பணத்திற்கு அளவு கடந்த மரியாதை இல்லை.
- சொத்து சேர்ப்பதிலும், பணத்தை முடக்குவதயுளும் பெரிய ஆர்வம் இல்லை
- கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்ததால் விட்டுகொடுக்கும் மனப்பக்குவம் இருந்தது
- பெரியாரை மதிக்கும் பண்பும் சிறியாரை அரவணைக்கும் போக்கும் இருந்தது...
- விரதம் மற்றும் பட்டினியாலேயே பல நோய்களை தீர்த்துக்கொண்டனர்.
எனவே அவர்கள் வாழ்ந்த சராசரி வயது.....80 முதல் 150 வரை (நோய் நொடியின்றி, இறக்கும் வரை தனது துணியை தானே தோய்த்து, அதிகாலை எழுந்து, மன அமைதியுடன்)
நமது அம்மா அப்பா காலத்தில்
- பசுமை புரட்சி என்னும் பெயரால் நஞ்சு கலந்த பயிர் பாகுபாடு ஆரம்பித்தது....அதன் பலனை முதல் தலைமுறையாக கண்டவர்களாதலால் இன்னும் பலரால் அந்த மயக்கத்தில் இருந்து வெளி வர இயலவில்லை..
- பொறுமை குறைந்தது......எதுவும் உடனே நடை பெற வேண்டும் என்ற ஆவல்....
- ஓரளவு உடல் உழைப்பை மதித்தாலும் சொகுசு வாழ்க்கையை நோக்கிய பயணம் அதிகம்
- கூட்டு குடும்பங்கள் சிதைந்து தனி குடும்பங்கள் பெருகியதால் பணத்தேடல் பல கிளைகளிலும் பயணம்
- ஆணுக்கு இந்த வேலை (ஆண் தண்ணீர் குடிக்க கூட சமையல் அறை வந்ததில்லை என்ற பெருமை), பெண்ணுக்கு இந்த வேலை என்ற அதீத வரையறை....
- மகன் மகளை திட்டி அடித்து வளர்த்து, பேரன் பேத்தி எடுக்கும் காலத்திலேயே ஓரளவு பொறுமை கை வருகிறது...
விளைவு.....பலர் சர்க்கரை நோய் எனவும் இதய அழுத்தம் எனவும் மாத்திரைகளையே உணவாய் உண்டு நாட்களை கடத்திகொண்டிருக்கின்றனர்.....சராசரி வயது குறைந்து, 60 -70 -80 இல் நிற்கின்றது......90 ஐ தாண்டினால் மிகுந்த அதிசயமே....
இன்றைய தலை முறை (நாம்)
- இரண்டு தலை முறைகளின் நிறை குறைகளை கண்டுள்ளதால், மீண்டும் இயற்கையை நோக்கிய வேட்கை....
- உடல் உழைப்பை அவமானமாக நோக்கும் எண்ணம் ...சென்ற தலைமுறையில் அம்மா அப்பாவுடம் பகிர்ந்த வேலைகளை (வீடு பெருக்குதல், துணி தோய்த்தல்) செய்ய மனம் இல்லை....
- மிகுந்த சொகுசு வாழ்க்கையை நோக்கிய பயணம் .....
- பெருத்த உடல் நோய்கள், உடல் சார்ந்த தொல்லைகள்
- நேரமின்மையால் அடி வாங்கும் உறவுகள்
- பயணத்திலேயே செலவழியும் பாதி நேரம்
- பணத்தை தேடி ஓடும் வாழ்க்கை முறை
- உடல் விதிகள், இயற்கை முறைகளை அறியாமல் மருத்துவரிடமும், மருத்துவமனைகளிடமும் மாட்டி முழிக்கும் அவல நிலை....
- சிறிதாக இருக்கும்போதே சரி செய்யாமல் நோய் முற்றிய பிறகு படும் அவஸ்தைகள்...
- நேரத்திற்கு எதையும் செய்யும் மனப்பாங்கு குறைந்துள்ளது...எதையும் எப்படியும் செய்யலாம் என்ற விட்டேத்தி தனம் .
- அனுபவ அறிவை கைக்கொள்ளும் மனதின்றி பெரியவர்களை மதிக்கும் தன்மை குறைந்துள்ளது....
இவர்களின் சராசரி வயதும் வயதான பின்னர் வாழ்க்கை தரமும் என்னவாக இருக்கும்.....
நாம் மாற இறைவனை வேண்டுவோம்....
No comments:
Post a Comment