Monday, March 21, 2011

ஒரு சமூக பள்ளி....எனது வேட்கை.....

ஒரு சமூக பள்ளி....எனது வேட்கை.....


வழக்கம்போல யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.....இது சரியில்லை அது சரியில்லை என்றி யோசtதுகொண்டேயிருந்தால் எப்படி, கொஞ்சமாவது அமைப்புகளை மாற்ற ஆரம்பிக்க வேண்டாமா....அதற்காகதான் நமக்கு கடவுள், இயற்கையோடு இனைந்து வாழ விரும்பும் ஒரு குழந்தையை கொடுத்திருக்கிறாரோ..... என்று நினைப்பேன்......

ரித்திகா - குழந்தை பெயர் புத்தகத்தில் கொடுத்திருந்த விளக்கம்....தெளிந்த நீரோடை...அவள் பெயரை புத்தகக்கடையில் இருந்தே மாலினியும் அவள் அப்பாவும் படித்து காட்ட,உடனே பிடித்தது அனைவருக்கும்.......ஆம் பெயருக்கேற்றவாறு தெளிந்த நீரோடை போன்ற எண்ணங்கள்.......இயற்கையிலிருந்து வழுவாத குழந்தை மனது.....மாற சொல்லும் இந்த உலகை பிடிக்காத நேரம் ஒரு பிடிவாத அழுகை, அழுத்தம்.......பாவம் இந்த குழந்தைகள். அவர்களின் குழந்தை தனத்தை தொலைக்க வைப்பதும் நாம் தான்.....அதை தொலைத்த பின்னர், "இது என்ன குழந்தையாகவா பேசுகிறது என்று சலித்து கொள்வதும் நாம் தான்".

நேற்று (20.3.2011) அவளிடம் தமிழவேள் அங்கிளின் நண்பர் (சரவணன்) , குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவதே இல்லையாம்.. வீட்டிலேயே ஆசிரியரை அழைத்து படிக்க வைக்கிறாராம். என்று கூறினேன்...உடனே பளிச்சென்று எனக்கொரு பதில்...(கொஞ்சம் சோகம் கலந்த)...."என்னையும் அப்படியே செய்திருக்கலாம் என்று"...

முதலில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தவுடன் சில நாட்கள் பள்ளி செல்ல மிகுந்த அழுகை...மதியம் வீட்டிற்கு வந்து உணவு உண்ட பழக்கம் மாறியது புரியாமல், பிடிக்காமல், கோபம், விரக்தி....புவனாவும் சில நாட்கள் ரித்துவிர்காக ஒரு பள்ளி ஆரம்பிக்க போகிறேன் என்று சொன்னவுடன் சிறிது நாள் குதூகலம்...ஆனால் வழக்கம் போல நமது வாழ்க்கை சக்கரம் சுழல, அவரவர் அவரவர் வேலையில் இருக்க, அவளும் ஓரளவு பள்ளிக்கு பழக....என்று வாழ்க்கை ஓடி கொண்டிருக்கிறது...ஆனால் ஒரு ஆறுதல் அவளது பள்ளி தாளாளர் (ஆர்த்தி ) எப்பொழுதும் எந்நேரமும் நேரில் பேசலாம்...அவரும் அவரது குழந்தைகளை அரை நாளே பள்ளியில் இருக்க வைக்கிறார். (அவரே சிறு வயதில் எப்பொழுதும் அரை நாளே பள்ளி படித்ததாகவும், சென்னை வந்தவுடன் தான் நிறைய பள்ளிகள் முழு நாள் பள்ளி வைத்ததை பார்த்ததாகவும் கூறினார்... எங்களுக்கும் அந்த சலுகை கொடுக்க கேட்டோம். முதலில் இதை ஒரு சோதனை முயற்சியில் செய்ய ஆரம்பித்ததாகவும், அப்பொழுது இருந்த முன்னூறு குழந்தைகளில் நூறு பேர் உடனே பள்ளியை விட்டு சென்று விட்டதாகவும் கூறினார்....எப்படியும், அடுத்த வருடம் திரும்ப இந்த சோதனை முயற்சி செய்ய இருப்பதாக கூறினார். அதை தவிர இந்த வருடம் நிறைய "ACTIVITIES" - செயல் முறை கல்வி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறினார்.... ஏற்கனவே CBSE BOARD அனைத்து வகுப்புகளிலும் கரும்பலகை மற்றும் வெண்திரை (IN Ritu's words - A/V - Audio Visual Screen) - 01.04.2011 முதல் அறிமுகம் செய்ய இருக்கிறது....ரித்துவும் அந்த நம்பிக்கையில் தான் இரண்டாவது வகுப்பிற்கு சரியென்று சொல்லியிருக்கிறாள்.....


ஆனாலும் இன்னொரு முறை அவள் அழுவதற்குள்....இறைவா ஒரு வழி காட்டு.....